பிரிட்டனில் அடுத்த பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி எப்படி தேர்வு செய்ய உள்ளது மற்றும் ஆதரவு யாருக்கு என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
பிரிட்டன் நாட்டில் கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய தலைவராக இருக்கும் போரிஸ் ஜான்சனை பிரதமர் பதவியில் இருந்து விலக செய்ய அக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, அவர் பதவி விலகினார். தற்போது, அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது.
அதன்படி, முன்னாள் நிதி அமைச்சரான ரிஷி சுனக் உட்பட ஒன்பதுக்கும் அதிகமானவர்கள் நாட்டின் அடுத்த பிரதமர் போட்டியில் இருக்கிறார்கள். எனினும் கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய 1922 குழு விவாதபடி கடும் விதிகள் இருக்கிறது. இதனால் போட்டிக்கு முன்பே சிலர் வெளியேறி விடுவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
அதாவது முதல் நிலையில் ஒரு போட்டியாளருக்கு 20 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. குறைந்த எண்ணிக்கையிலான ஆதரவு பெறுபவர்கள் வெளியேற்றப்படுவார்கள். அதன் பிறகு மீதமுள்ள வேட்பாளர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பு நடத்தப்படும். இரண்டு பேர் மட்டும் மீதம் இருக்கும் நிலையில், அவர்களுக்கு கட்சியினுடைய சிறப்பு உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.
இந்நிலையில் போரிஸ் ஜான்சன் தன் ஆதரவு யாருக்கு என்பதை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இன்னும் சில வாரங்களில் பிரதமர் யார் என்று தெரியவரும் என்றும் கூறியிருக்கிறார்.
ரிஷி சுனக் முதல் சுற்றில் 33 வாக்குகளுடன் முதலிடம் வகிக்கிறார். பென்னி மோர்டான்ட் 20 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மீதமுள்ளவர்கள் பதினாறு மற்றும் அதற்கு குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். எனவே இரண்டாம் சுற்றி இவர்கள் இருவருக்கும் இடையே தான் நடக்கவிருக்கிறது.