Categories
உலக செய்திகள்

தாய்மையின் அருமை : “PMDS” அரிய வகை நோயால்….. 18 வயதில் கர்ப்பமான ஆண்….!!

அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது ஆண் ஒருவர் தனது உடலுக்குள் கருப்பை, சூலகம்,  கருப்பை வாய் மற்றும் ஹலோபியன்  குழாய்கள் செயல்படுவது  கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கர்ப்பம் தரித்துள்ளார்.

அமெரிக்கா மாசூசெட்ஸ் மாகாணத்தின் தலைநகரான பாஸ்டனை சேர்ந்தவர்   மைக்கில் சேனல். இவருக்கு தற்போது 18 வயதாகிறது. இவர் பிறக்கும்போது ஆணாக பிறந்தவர் தான். வளரும் போது  மற்ற ஆண் நண்பர்களிடமிருந்து சிறுசிறு வித்தியாசங்களை உணர்ந்த இவர் தற்போதும் அதே வித்தியாசத்துடன் சில பெண் குணாதிசயங்களை கொண்டு இருந்து வந்துள்ளார். ஆனால் அதைப் பற்றி பெரிதாக இவர் கவலை கொண்டதில்லை.

இந்நிலையில் சிறுநீர் கழித்த சில நிமிடங்களுக்கு உடலில் ஒருசில வித்தியாசமான நிகழ்வுகள் நடப்பதை உணர்ந்துள்ளார் மைக்கில். இதையடுத்து கடந்த ஆண்டு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் Persistent Mullerian Duct Syndrome (PMDS ) என்னும் அரிய வகை நோய் அவருக்கு இருப்பதை கண்டறிந்தனர்.

அதாவது உடலுக்கு வெளிப்பகுதியில் ஆண் இனப்பெருக்க உறுப்பையும், உடலின் உட்பகுதியில் பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளையும் கொண்டிருப்பதே இந்த PMDS நோயாகும். பொதுவாக இந்த நோய் உள்ளவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதால், கருப்பை, சூலகம், கருப்பை வாய், கலோப்பியன் குழாய்கள் உள்ளிட்டவற்றை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கி கொள்ளுமாறு மைக்கி சேனலிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் தனது ஆண் இனப்பெருக்க உறுப்பில் மலட்டுத்தன்மை ஏற்படுவதை உணர்ந்த மைக்கி, அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க நினைத்துள்ளார். அதன்படி, நன்கொடையாளர் ஒருவரின் மூலம் விந்தணுவை பெற்று கர்ப்பம் தரித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், நான் குழந்தையாக இருக்கும் போது பொம்மைகளுடன் விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

நான் தனிமையாக இருக்கும் சமயங்களில், அதனுடன் தான் என்னுடைய நேரத்தை செலவிடுவேன். எதிர் காலத்தில் என்னுடைய குழந்தையுடன் அதிகமான நேரத்தை செலவிட விரும்புகிறேன். நான் கர்ப்பம் தரித்திருப்பதை எண்ணி பெருமிதமாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் தற்போது கர்ப்பம் தரித்த அவர், எதிர்காலத்தில் இந்த நோய் குறித்த விழிப்புணர்வையும், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான செயல்களிலும் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார். 

Categories

Tech |