Categories
உலக செய்திகள்

“இவருக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை”… இந்த தப்புக்கு கடுமையா தண்டிக்கணும்… ரோஹித்தின் பரபரப்பான ட்விட்டர் பதிவு…!!

இலங்கைப் பிரதமரின் இளைய மகனான ரோஹித் ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை பிரதமரின் இளைய மகனான ரோஹித் ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தாவது என்.வீ. திவாகரன் என்பவர் எனது மனைவியான டட்யானாவின் சிறிய தந்தை ஆவார். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கியிருந்து அங்கு வரும் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அவர் எனது மனைவியான டட்யானாவின் தாய்க்கு இரண்டாவது கணவர் என்ற போதிலும் என் மனைவியின் தந்தை அவரல்ல. அதனால் அவருடன் எனக்கு பெரிய அளவில் எந்த பந்தமும் இல்லை. கடந்த சில நாட்களாக அவருடன் நான் எந்தவித முழுமையான தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. எனவே பாலியல் வழக்குகளில் ஈடுபடுவோரை அந்தஸ்து பார்க்காமல் கடுமையாக நடவடிக்கை எடுத்து தண்டனை அளிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |