சிறுமிக்கு வீடு புகுந்து வலுக்கட்டாயமாக தாலி கட்டிய வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியின் கழுத்தில் வாலிபர் ஒருவர் கட்டாய தாலி கட்டி தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் பூந்தமல்லி காவல் துறையினர் வாலிபர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சிறுமியின் உறவினரான விஜய் என்பவர் தான் சிறுமிக்கு கட்டாய தாலி கட்டியுள்ளார் என்பது தெரியவந்தது.
மேலும் அவர் இரண்டு பெண்களை ஏற்கனவே திருமணம் செய்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து விஜய் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி வீடு புகுந்து சிறுமிக்கு கட்டாய தாலி கட்டியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து பூந்தமல்லி காவல்துறையினர் வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதனால் திருவேற்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.