Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆபாச வீடியோ காண்பித்து… சிறுமியிடம் அத்துமீறிய தொழிலாளி… போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!

சிறுமியிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கூலித்தொழிலாளியை  போலீசார் போக்சோவில் கைது செய்தனர்..

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகிலுள்ள புள்ளாக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த நடேசன் என்பவரது மகன் வடிவேல்.. 47 வயதுடைய இவன் அதே பகுதியில் கூலிவேலை செய்து வருகிறான். இவனுக்கு திருமணமாகி ஒரு மகளும் உள்ளார்.. இந்தநிலையில் வடிவேல், புள்ளாக்கவுண்டன் பட்டியைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு படித்தவரும் 11 வயது சிறுமியிடம், தனது மொபைல்போனில் ஆபாச வீடியோவை காண்பித்து, அத்துமீறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளான்.

இதில் பயந்துபோன அந்த சிறுமி உடனடியாக அங்கிருந்து சென்று நடந்த சம்பவம் பற்றி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், வடிவேல் மீது சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.

இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், வடிவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆத்தூர் சிறையிலடைத்தனர். கூலித்தொழிலாளி சிறுமிக்கு ஆபாச படம் காண்பித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |