மாணவியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக போலீஸார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூடசேரி மேலப்பட்டி தெருவில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி சந்தோஷ்குமார் அந்த மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதனால் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என அவரது தாயார் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவர் திருச்செங்கோட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் மணியனூர் பேருந்து நிறுத்தத்தில் அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதோடு அந்த மாணவியை பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.