Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கண்டித்து உறவினர் வீட்டிற்கு அனுப்பிய பெற்றோர்… கர்ப்பமான 10-ஆம் வகுப்பு மாணவி… வாலிபருக்கு சிறை… திருப்பூரில் பரபரப்பு…!!

பத்தாம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொடி கம்பம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் பிரின்டிங் பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 15 வயதான பத்தாம் வகுப்பு மாணவிக்கும், கார்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளனர். அதன்பின் அந்த சிறுமியை அவருடைய உறவினர் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்நிலையில் அவரது பெற்றோருக்கு சிறுமி ஆறு மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் சிறுமியை ஏமாற்றி கார்த்தி பாலியல் பலாத்காரம் செய்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |