16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக போலீசார் ஒரு சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் ஊத்துக்குளி டவுன் பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுவன் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் ஊத்துக்குளி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். மேலும் அவர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த சிறுவனை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விட்டனர்.