சிறுமியை கடத்திச் சென்று ஐந்து மாத கர்ப்பமாக்கியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து விட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஆண்டு ஒரு சிறுமி காணாமல் போனார். அந்த சிறுமியின் தாயார் தன் மகளை காணவில்லை என அளித்த புகாரின் பேரில் பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிந்து காணாமல் போன சிறுமியை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமியை கடந்த செப்டம்பர் மாதம் கண்டுபிடித்து போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டனர். இதனையடுத்து பெற்றோர் அந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்து அவரிடம் அது குறித்து விசாரித்துள்ளனர்.
அப்போது வெள்ளித்திருப்பூர் பகுதியில் வசித்து வரும் சண்முகம் என்பவர் இந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றதும், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதும் அவரது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. மேலும் சண்முகம் வேலை செய்யும் அதே மில்லில் தான் இந்த சிறுமியும் வேலை பார்த்து வந்ததால், சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி சண்முகம் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சண்முகத்தை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.