பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் வசித்து வரும் ஒரு மாணவி பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து முத்துமாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.