Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு நீதிமன்றம் 5 வருட ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக  தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் 2013-ம் வருடம்  திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் பூபாலன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்துள்ள நிலையில் அரசு வழக்கறிஞர் காவல்துறையினரின் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை கோர்ட்டில் சமர்பித்துள்ளார். இதனையடுத்து நீதிபதி ராஜலட்சுமி கைது செய்யப்பட்ட பூபாலனுக்கு 5 வருட ஜெயில் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும் குற்றவாளி பூபாலனை புழல் சிறையில் அடைக்கவும், பாதிக்கப்பட்ட  சிறுமிக்கு நஷ்ட ஈடாக இரண்டு லட்சம் கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றியதற்காக காவல்துறை அதிகாரி ஷீலா மேரியை அவரது உயரதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |