கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள தீர்த்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். 45 வயதுடைய இவர் கூலித் தொழில் செய்து வருகிறார்.. இவர் வசிக்கும் அதே பகுதியில் தான் 16 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய மாமா வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில், அந்தசிறுமியை ராமன் பேசி பழகி ஏமாற்றி ஒரு மாட்டுக் கொட்டகையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் அந்தசிறுமி கர்ப்பமாகிவிட்டார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர், புவனகிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சிதம்பரம் நகர துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி ஆகியோர் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து சிறுமியை கர்ப்பமாக்கிய ராமனை, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.