Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தீவிர வாகன சோதனையின் போது…. மொத்தமாக சிக்கிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

காரில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தி வரும் கும்பலை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு காரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் காரில் இருந்த 3 நபர்களும் முன்னுக்கு பின் முரணாக கூறியதால் காவல்துறையினர் பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது காரில் சோதனை செய்த போது சீட்டுக்கு அடியிலும், காரின் டிக்கியிலும் பிளாஸ்டிக் மூட்டைகளில் பான் மசாலா, குட்கா போன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்திலுள்ள புன்வா பகுதியில் வசிக்கும் மேகாராம், அசாம் மாநிலத்தில் வசிக்கும் ஷமீர்கான் மற்றும் சென்னை சவுகார்பேட்டை பகுதியில் வசிக்கும் கைலாஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த
பள்ளிகொண்டா காவல்துறையினர் 2-பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |