போதை பொருட்கள் விற்பனை செய்த வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கரைப்புதூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது நொச்சிபாளையம்-மீனாம்பாறை சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்தபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட 20 கிலோ பான் மசாலா பொருட்கள் இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் மளிகைக் கடை உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தில் வசிக்கும் அராத் மாலிக் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அராத் மாலிக்கை கைது செய்ததோடு அவரிடமிருந்த போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.