பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வள்ளிநாயகபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி பகுதியில் வசிக்கும் சக்திவேல் மற்றும் சிவா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இவர்கள் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த பொதுமக்களை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டலில் ஈடுபட்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்துள்ளனர்.