Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் அவதி…. உயர்மட்ட பாலம் அமைக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை….!!

தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆசனூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் தூறல் மழை பெய்ய தொடங்கியது. இதனை தொடர்ந்து 1 மணி வரை கனமழை பெய்தது. இதனையடுத்து ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழையால் குளியாடா, தேவர்நத்தம், மாவள்ளம், ஓசட்டி, அரேபாளையம் ஆகிய வனப்பகுதியில் உள்ள காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இதனால் அரேபாளையம் தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றுள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலம்-கொள்ளேகால் செல்லும் சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல் ஆசனூர்-ஒங்கல்வாடி சாலையில் உள்ள தரைப்பாலத்தையும் காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்ததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே மலைகிராம மக்கள் தாளவாடி மற்றும் ஆசனூர் பகுதியில் தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |