இறந்த மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கைலாசபுரம் கிராமத்தில் மூதாட்டி பேச்சியம்மாள் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள மயானத்துக்கு அவரது உடலை தகனம் செய்வதற்காக கொண்டு சென்றனர். அப்போது திடீரென அங்குள்ள பொதுமக்கள் சாலையில் அவரது உடலை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இறந்த மூதாட்டியின் உடலை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளதாகவும், எனவே அங்கு மேம்பாலம் அமைத்து தர வேண்டும் எனவும், மயானத்தில் மேற்கூரை கட்டித்தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மணியாச்சி ஒட்டப்பிடாரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை அறிவித்து மூதாட்டியின் உடலை தானம் செய்யச் சென்றனர்