நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பில்லா திரைப்படம் தமிழகம் முழுவதும் மீண்டும் ரீ – ரிலீசாக உள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘பில்லா’ . இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா , நமீதா ஆகியோர் நடித்திருந்தனர் . மேலும் இந்த படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்த படம் ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக்காக இருந்தாலும் நடிகர் அஜித்தின் நடிப்பும் படத்தை எடுத்த விதமும் ரசிகர்களை கவர்ந்தது . ஆனால் இதையடுத்து வெளியான ‘பில்லா 2’ எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை . இந்நிலையில் வருகிற மார்ச் 12ஆம் தேதி ‘பில்லா’ படம் தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது . இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் .