Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. தல அஜித் நடிக்கும் துணிவு படத்தின் “காசேதான் கடவுளடா பாடல்” வெளியீடு….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது துணிவு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன் பிறகு துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ம் பாடலான காசேதான் கடவுளடா படலை படக் குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடலை போனி கபூர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் ஆனது தற்போது ரசிகர்களைக் கவர்ந்து வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில் தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதேபோன்று தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.

Categories

Tech |