Categories
கட்டுரைகள் பல்சுவை

கவி யுகம் கண்ட…… மகாகவி பாரதியார்…..!!

கவி யுகம் கண்ட பாரதியின் நினைவு நாளை அனைவரும் நினைவு கூர்வோம்.

தமிழனின் தன்னிகரற்ற கவிஞாயிறு பாரதமாதாவின் மகாகவி பாரதியார். மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும் , நினைவு நல்லது வேண்டும் , கனவு மெய்ப்பட வேண்டும் , மண்ணும் மரமும் பயனுற வேண்டும் , அவற்றினால் மனிதனும் உருப்பெற வேண்டும்,  பெண் விடுதலை வேண்டும் , நம் பாரதம் பாரெங்கும் பெருமை அடைய வேண்டும் என்று கவிதை எழுதுபவன் கவிஞ்சனன்று.  கவிதையே வாழ்க்கையாக கொண்டு  அழகியலில் உணர்வு ததும்பும் தத்துவ சிந்தனைகளை கவிதையாக வடித்த தேசிய கவி என்ற போதிலும் உலகம் தழுவிய சிந்தனைகளை உண்மையுடனும் , நேர்மையுடனும் உலகிற்கு அளித்த தமிழின். தன்னிகரற்ற கவிஞன் பாரதியின் நினைவு நாள்.

இவர் 1882ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ஆம்  நாள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் சின்னச்சாமி , இலட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். சுப்பையா என்ற புனைப் பெயரை கொண்ட பாரதி அவர்கள் பள்ளிப் பருவத்திலேயே கவிபுனையும் திறமையுடன் விளங்கினார்.  காலத்தின் கோலத்தால் வறுமை வாட்டி எடுத்தாலும் தாம் படித்த கவித்துவ தால் எட்டையபுரம் மன்னரால் போற்றப்பட்டு  பொருளுதவியும் பெற்றார்.வந்தே மாதரம் என்போம் எங்கள் பாரத தாயை வணங்குதும் என்போம். கங்கை காவிரியை இணைத்து பாரதத்தை புண்ணிய பூமியை மாற்றுவோம் என்று ஒருமைக்கும் , பன்மைக்கும் பாலம் அமைத்த பாரதியே உன் கனவு முழுமையாக மெய்படவில்லை என்பதுதான் என்பது வேதனை.

இன்று நம் பாரதம் பிரிவினை , வன்முறை என்று சறுக்கல்களை சந்தித்தாலும் சிந்திக்க ஒருவரும் இல்லை உன்னைப்போல். தமிழுக்காக வாழ்ந்த தன்மான கவிஞனாய் போற்றப்பட்ட பாரதியார் அவர்கள் உடல் நலம் தளர்ந்து 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.தன் நலனை பற்றி கருதாமல் தேசத்தையும் , சமூகத்தையும் கருதி வாழ்ந்த கவியில் யுகம் கண்ட மகா கவியே உன் நினைவு நாளான இன்று உம்மை போற்றி வணங்குகின்றோம்.

Categories

Tech |