Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த வட மாநில இளைஞர்கள் “சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை !!..

விஷவாயு தாக்கி வட மாநில இளைஞர்கள் உயிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது .

திருப்பூர் மாவட்டத்தில்   கவுண்டம்பாளையம் என்னும் பகுதியில் இயங்கி வரும் சாய தொழிற்சாலை  ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியானது இன்று நடைபெற்றது.
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில வட மாநிலத்தை சேர்ந்த  இளைஞர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது திடீரென விஷவாயு தாக்கியதால் பணிபுரிந்து கொண்டு இருந்த வடமாநில இளைஞர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் விசாரணையில் உயிரிழந்த இளைஞர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிந்து உள்ளனர் மேலும் விஷவாயு எவ்வாறு தாக்கியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Categories

Tech |