மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ சாராயத்தை குடித்த 10 பேர் உயிரிழந்த நிலையில், மீதி உள்ளவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பஹவாலி மற்றும் மன்பூர் போன்ற கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் 18 க்கும் அதிகமான ஆண்கள் அறியாமல் விஷ சாராயத்தை குடித்து உள்ளனர். எனவே விஷ சாராயம் அருந்திய அனைவருக்கும் இன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து 1௦ பேர் உயிரிழந்த நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 8 பேரை பொதுமக்கள் மீட்டு உடனடியாக மொரினா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து விஷ சாராயம் குடித்த 10 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மீதி உள்ளவர்கள் உயிருக்குப் போராடும் நிலையில் உள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.