Categories
உலக செய்திகள்

எதிர்கட்சித் தலைவருக்கு விஷம் ? குண்டை தூக்கி போட்ட அமெரிக்கா… ரஷ்யாவுக்கு சிக்கல் …!!

ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் நவல்னிக்கு விஷம் கொடுத்தற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சந்தேகம் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

சைபீரியாவிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்றபோது திடீரென அவர் மயக்கமடைந்த நிலையில், ரஷ்யாவில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், உயர் சிகிச்சைக்காக அவர் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இது சர்வதேச விவகாரமாக உருவெடுத்துள்ள நிலையில் இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ முக்கியக் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

அதில், நவல்னிக்கு விஷம் கொடுத்தற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் ரஷ்யா அரசு உரிய பொறுப்பேற்று முறையான விசாரணை நடத்தவதை அமெரிக்கா விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்தச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என ரஷ்யாவுக்கு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தீவிர எதிர்ப்பாளரான நவல்னி, அந்நாட்டின் ஊழல் புகார் தொடர்பாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |