ஜெர்மன் நாட்டின் ஒரு நகரத்தின் துறைமுகத்தில் ஆபத்தான திரவ கசிவு வெளியாகி நச்சுவாயுவை உண்டாக்கியதால் அந்நகரின் ஒரு பகுதியை அடைத்திருக்கிறார்கள்.
ஜெர்மன் நாட்டின் Mannheim என்னும் நகரத்தில் இருக்கும் துறைமுகம் ஒன்றில் ஆபத்தான திரவ கசிவு வெளியேறியது. அதனை, கட்டுப்படுத்த முயற்சித்த காவல்துறையினர் 16 பேர் நச்சுப் புகையால் பாதிப்படைந்தனர்.
அதனைத்தொடர்ந்து, அந்த துறைமுகத்தை சுற்றி அமைந்திருக்கும் சுமார் 1.3 கிமீ சுற்றளவில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருப்புகளின் கதவு மற்றும் ஜன்னல்களை அடைத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். அப்பகுதியில் இருக்கும் சாலைகள் அடைக்கப்பட்டிருப்பதோடு ரயில்கள் வேறு பாதையில் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது.