கடலூரில் தாய் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்ப சுடுகாட்டிற்கு சென்று காவல்துறையினர் மீட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை அடுத்த புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் இருவருக்கும் இந்துமதி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டு வேலைகள் செய்யாத காரணத்தினால் அவரது தாயார் தனலட்சுமி இந்துமதியை கடுமையாக கண்டித்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த இந்துமதி இரவு நேரத்தில் தாயும் தந்தையும் திட்டகுடிக்கு வீட்டுப் பொருட்கள் வாங்க சென்றிருந்த சமயத்தில் காதில் விஷம் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின் பெற்றோர்கள் திரும்பி வந்து பார்த்த பொழுது மகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ந்து போய் அழத் தொடங்கினார். இதையடுத்து சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்காமலேயே இன்று காலை இந்துமதியின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த அறிந்தவுடன் சுடுகாட்டிற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் இந்துமதியின் எரிந்துகொண்டிருந்த உடலை அனைத்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.