Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

விஷப்பூச்சிகள் கடிக்கு… “இயற்கை வைத்தியத்தின் மூலம் குணம் காண”… இந்த ஒரு செடி போதும்..!!!

குப்பை மேடுகளில் வளரும் வெள்ளை எருக்கு செடியில் எவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.

தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் தானே வளர்வது வெள்ளை மலருடைய வெள்ளை எருக்கு செடி. இதன்  இலை, பூ, பட்டை, வேர் முதலியவை மருத்துவ பயனை நிறைந்தது. இதன்  இலை நஞ்சு நீக்கும் தன்மை கொண்டது. வாந்தி உண்டாக்கும்,பித்தம் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்து வேதனை குறைக்கும். பூ, பட்டை  ஆகியவை கோழையகற்றுதல், முறை நோய் நீக்குதல் போன்ற பண்புகளை கொண்டது.பால் புண்ணுண்டாக்கும் தன்மை கொண்டது.

வெள்ளெருக்கம்பூ ஆஸ்துமா, மார்புச்சளி ஆகியவற்றிற்கு சிறந்தது. குப்பை மேடுகளிலும் தரிசு நிலங்களிலும் காணப்படும் எருக்கன் செடியை விஷ செடி என்று நாம் கூறுகிறோம். ஆனால் அது உண்மை இல்லை. எருக்கன் செடியில் பூக்கும் பூக்களில் எண்ணற்ற மருத்துவ குணம் உள்ளது. விஷக்கடிக்கு மருந்தாக பயன்படும். இந்த பூக்கள் சிறுநீரக கோளாறுகளை மூன்று நாட்களில் நீக்கும்.

இந்தச் செடியில் வெள்ளருக்கு, நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகை யை கொண்டுள்ளது, புதர்செடி வகையைச் சேர்ந்த வெள்ளருக்கு பாம்புகளுக்கு ஆகாது என்று சொல்வார்கள். சக்திவாய்ந்த வெள்ளருக்கு செடியின் இலை, பூ, பட்டை முதல் அனைத்தும் மருத்துவ பயனை நிறைந்தது பலவிதமான நோய்களை தீர்கின்றது.

Categories

Tech |