Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பொய்யான சான்று…. மனு தாக்கல் செய்த முன்னாள் எம்.எல்.ஏ…. ஆட்சியரின் உத்தரவு….!!

போலி சான்றிதழ் கொடுத்து மனுத்தாக்கல் செய்த முன்னாள் எம்.எல்.ஏ மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் பேரூராட்சியில் 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் உதயேந்திரம் பேரூராட்சி வார்டு எண் 9 ஆதிதிராவிடர் பொது வார்டாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வார்டில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கபில்தேவ் என்பவரிடம் 4.2.2022 அன்று அ..திமு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜ. தமிழரசன் என்பவர் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவர் ஆகிய இவர் தான் இந்து ஆதிதிராவிடர் என வேட்புமனு தாக்கலின் போது பொய்யான சான்று சமர்ப்பித்துள்ளார்.

இதனால் இவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் தமிழரசன் மீது தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கலெக்டர் கூறியுள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |