கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூராக கருத்து தெரிவித்து மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்கத்தெரியாத போக்கிரிகள் தண்டிக்கப்பட வேண்டும்மென பிரசன்னா அவேசமாக தெரிவித்துள்ளார்.
கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூராக கருத்து தெரிவித்து கூறிய ஒருவருடைய வீடியோவானது சமூக வலைத்தளத்தில் பெருமளவில் பரவி கொண்டிருக்கிறது. இந்து அமைப்பினை சேர்ந்தவர்கள் இத்தகைய கருத்துக்கு கண்டனம் தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றி நடிகர் பிரசன்னா அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அவருடைய கருத்தை பகிர்ந்துள்ளார். எவரும் எவருடைய நம்பிக்கைகளுக்கும் ஒரு அளவினை கடந்து விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் கொச்சைப்படுத்தி பேசுவது மதச்சார்பின்மைக்கு சரியானதாக இல்லை. மேலும் அவரையும் இவரையும் ஏன் கேட்பதில்லை என்ற வாதம் எவ்வகையிலும் பயன் அளிக்காது.
அவரவர்களின் நம்பிக்கையானது அவரவர்களுக்கு பெரிது என்றும் இதனை மதிக்க தெரியாத போக்கிரிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு செய்தால் மதச்சார்பற்ற நாடாக இருக்க இயலும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இத்தகைய மதச்சார்பின்மைக்கு நம்பிக்கை கொள்வது இன்றைய காலகட்டத்தில் மத நம்பிக்கையில் மிகப்பெரிய முக்கியத்துவமாக உள்ளது என கூறியிருக்கிறார். நடிகர் பிரசன்னா அவர்களின் இத்தகைய கருத்துகளுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பு கருத்துக்களை கமெண்ட்டுகளாக பதிவு செய்து வருகின்றனர்.