போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு அரசு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் பொதுச் செயலாளர் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து மாநில செயலாளர் காசிவிசுவநாதன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அதில் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கிட வேண்டும் எனவும், ஓய்வு பெற்றவர்களுக்கு 6 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.
எனவே உடனே அகவிலைப்படி வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் எனவும், புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு போக்குவரத்து கழகங்களை பாதுகாத்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி, குமாரசாமி, ஹரிகிருஷ்ணன், பொருளாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.