Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிரடி வாகன சோதனை…. போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள்…. 79 பேர் மீது வழக்கு பதிவு….!!

போக்குவரத்து விதிகளை மீறிய 79 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி பொதுமக்களுக்கு  அச்சுறுத்தல் ஏற்படுத்திய 150 இருசக்கர வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு வாகன சட்டத்தின்படி வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து வாகனங்களை அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பியும் ஓட்டி பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி 112 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் மீது காவல்துறையினர் இந்திய தண்டனை சட்ட வழக்குகள், மோட்டார் வாகன சட்ட வழக்குகள் உள்பட மொத்தம் 79 வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 600 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |