16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கூலித்தொழிலாளியான வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக இறந்துவிட்டார். இதனால் வீரமணி தனது 2 பெண் குழந்தைகளையும் மாமனார் பராமரிப்பில் வளரவிட்டுள்ளார்.
இந்நிலையில் முன்னூராங்காடுவெட்டி பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் வீரமணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சிறுமி தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், வீரமணி அவரை சித்திரவதைகள் செய்து வருவதாகவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின்படி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் 16 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அளித்த புகாரின் படி மகளிர் காவல்துறையினர் வீரமணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.