சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரத்தை அடுத்து இருக்கும் பிள்ளையார்பாலம் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமூக வலைதளம் மூலமாக 16 வயது சிறுமியுடன் பழகி ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த சந்துருவை காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். அப்போது காஞ்சிபுரத்தில் அவர் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் சந்துருவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.