Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

போக்குவரத்துக்கு நெரிசலை தவிர்க்க…. இனி இப்படிதா போகணும்…. போலீஸ் இன்ஸ்பெக்டரின் தகவல்….!!

கிரீன் சர்க்கிள் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பதற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் ஒன்றான கிரீன் சர்க்கிளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் இருசக்கர வாகனங்கள் ஆட்டோ, கார் ஆகியவை கிரீன் சர்க்கிள் பகுதி வழியாக செல்லாமல் மாற்று வழியில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து பாகாயம், தொரப்பாடி, தோட்டப்பாளையம் போன்ற பகுதிகளில் இருந்து காட்பாடி சாலை, பழைய பைபாஸ் சாலை வழியாக காட்பாடி நோக்கி செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் ஆகியவை நேஷனல் சர்க்கிளில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் இடதுபுறத்தில் செல்லும் சாலை வழியாக சென்னை- பெங்களூர் சர்வீஸ் சாலையில் செல்ல வேண்டும்.

அங்கு இருந்து சிறிது தூரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக பெங்களூர்- சென்னை சர்வீஸ் சாலைக்குச் சென்று வழக்கம்போல் பாலாற்று புதிய மேம்பாலம் வழியாக காட்பாடிக்கு செல்லவேண்டும். அதன்பின் வேன், லாரி, பேருந்து போன்றவை வழக்கம் போல் கிரீன் சர்க்கிள் வழியாக காட்பாடிக்கு செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த போக்குவரத்து மாற்றம் நேற்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நேஷனல் சர்வீஸ் பகுதியில் 3 இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்படும் என்று போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |