Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கூட்டம் கம்மியா தான் இருக்கு… இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள்… போக்குவரத்து துறை அதிகாரிகளின் தகவல்…!!

திருவாரூரில் முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்று 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் ஒரு வாரம் முழு ஊரடங்கை தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் மக்கள் நலன் கருதி பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டபோதிலும் மக்கள் அதில் குறைவாகவே பயணித்துள்ளனர்.

இதேபோன்று மன்னார்குடியில் இருந்து சென்னை, திருப்பூர், திருச்சி போன்ற பகுதிகளுக்கும் நேற்று மாலையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அந்த பேருந்துகளிலும் பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறும்போது நேரத்தை பொறுத்து  பேருந்துகளில் வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |