Categories
உலக செய்திகள்

போலந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறதா..? பிரதமர் அளித்த விளக்கம்..!!

போலந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற இருப்பதாக கூறப்பட்டதற்கு அந்நாட்டுப் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.

போலந்து நாட்டின் எதிர்க்கட்சிகள் மற்றும் அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தங்கள் நாட்டை வெளியேற்ற விரும்புவதாக கூறினர். மேலும் முரண்பாடு ஏற்படும் சமயங்களில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டத்தை காட்டிலும், போலந்து நாட்டின் தேசிய சட்டத்திற்கு முன்னுரிமை இருக்கிறது என்று அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் மோதலை உண்டாக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய நிர்வாக குழு கூறியிருந்தது. இந்நிலையில் நாட்டின் பிரதமரான, Mateusz Morawiecki, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, நாங்கள் வெளியேற விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், “நான் விளக்கமாக கூறுகிறேன், ஐரோப்பிய குடும்பத்தில் ஒருவராக போலந்து இருக்கும்.

அரசியலமைப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, நாட்டின் அரசியல் அமைப்பினுடைய உள்ளடக்கத்தை பின்பற்றுகிறது என்பதை உறுதி செய்திருக்கிறது. அதாவது எங்கள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் பிற சட்ட ஆதாரங்களை காட்டிலும் சிறந்தது. பிற நாடுகளை போன்று  எங்களுக்கு உரிமைகள் இருக்கிறது. எங்கள் சட்டங்களை மதிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாம் வரிசை நாடாக இருப்பதை விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |