Categories
உலக செய்திகள்

நாங்கள் உக்ரைனிற்கு போர் விமானங்கள் அனுப்பமாட்டோம்…. போலந்து அறிவிப்பு…!!!

போலந்து அரசு, உக்ரைன் நாட்டிற்கு போர் விமானங்கள் அனுப்பப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. எனவே, கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 50 கோடி டாலர் மதிப்பு கொண்ட போர் விமானங்கள், ஆயுதங்களை அந்நாட்டிற்கு அனுப்ப ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் தீர்மானித்தனர்.

இந்நிலையில் நேட்டோ அமைப்பில் இருக்கும் போலந்து, உக்ரைன் நாட்டிற்கு போர் விமானங்களை அனுப்ப மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறது. இது பற்றி போலந்து அதிபரான அன்ட்ரெஜ் துடா தெரிவித்திருப்பதாவது, ரஷ்யா-உக்ரைன் போரில் போலந்து சேரவில்லை.

நேட்டோ அமைப்பிற்கும், இதற்கும் சம்பந்தம் கிடையாது. உக்ரைன் நாட்டிற்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில், நாங்கள் உதவிகள் வழங்கி இருக்கிறோம். ஆனால், போர் விமானங்கள் அனுப்பப்போவதில்லை. அவ்வாறு அனுப்பினால், போரில் தலையிடுவது போன்று ஆகும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |