ஐரோப்பிய நாடான போலந்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் தொடக்கத்தை எங்கள் நாடு எதிர்கொண்டு வருகிறது என்று சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
சமீபத்தில் போலந்தில் சினிமா,ஹோட்டல், பனிச்சறுக்கு, திரையரங்குகள் போன்றவை 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் கொரோனா வைரஸின் பரவல் தீவிரம் அடைந்தால் ஊரடங்கு நடவடிக்கைகள் மீண்டும் அமலில் கொண்டு வர வேண்டிய நிலைமை உருவாகும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
இந்நிலையில் போலந்து கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் தொடக்க நிலையில் உள்ளது. இந்த மூன்றாம் அலை ஸ்லோவாக்கியா அல்லது செக் குடியரசை போல தீவிரமான பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தவில்லை. இதுகுறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் wojciech Andrusiewicz கூறிய போது, “எங்கள் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாங்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்.
வாரம் வாரம் 20% வரை கொரோனாவால் பாதிக்கப்படுவார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது போலந்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 10% பேர் பிரிட்டனின் மாறுபட்ட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.