உத்திர பிரதேச மாநிலத்திற்கு விமானத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து வந்த 297 பயணிகளில் போலியான விவரங்களை கொடுத்த 13 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீரட்டின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள மீரட்டிற்கு விமானத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து சுமார் 297 பயணிகள் வந்துள்ளார்கள். அவர்களில் 13 பேர் தங்களுடைய உண்மையான விவரங்களுக்கு பதிலாக போலியான முகவரி மற்றும் செல்போன் எண்களை கொடுத்துள்ளார்கள்.
இதனை கண்டறிந்த புலனாய்வு பிரிவு அதிகாரிகள் போலியான முகவரி மற்றும் செல்போன் எண்களை கொடுத்த 13 பேரை தேடும் பணியில் இறங்கியுள்ளார்கள். இந்த தகவலை மீரட்டின் தலைமை மருத்துவ அதிகாரியான அகிலேஷ் என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.