Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போலி பொருட்கள் தயாரிப்பு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

2 லட்சம் மதிப்புடைய போலி மது பாட்டில்களை காரில் கடத்தி சென்ற 2 வாலிபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதிக்கு புதுச்சேரியிலிருந்து காரில் போலி மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறை சூப்பிரண்டு பெருமானுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி துணை காவல்துறை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் பண்ருட்டி ரயில்வே நிலையம் அருகாமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் வழிமறித்துள்ளனர். ஆனால் காவல்துறையினரை கண்டதும் ஓட்டுனர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் ஜீப்பில் விரைவாக சென்று 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதனையடுத்து காரில் வந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்த போது அவர்கள் சுதாகர் மற்றும் பரத்குமார் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் இவர்கள் புதுச்சேரியிலிருந்து பண்ருட்டி பகுதிக்கு மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதில் அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போலி மதுபான தொழிற்சாலையிலிருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்கள் வாங்கி அதை தமிழகத்தில் விற்பனை செய்வதாகவும், மதுபாட்டில்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் போன்றவைகளை போலியாக  தயாரித்து அவற்றில் ஒட்டி கடத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுதாகர் மற்றும் பரத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.

அதன்பின் அவர்கள் வைத்திருந்த 30 அட்டைப் பெட்டிகளில் 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய 1440 போலி மதுபாட்டில்கள், 100 லிட்டர் சாராயம் மற்றும் கார் போன்றவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து துணை காவல்துறை சூப்பிரண்டு விஜயகுமார் கூறும் போது, புதுச்சேரி மாநிலத்தில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வருகின்றது. அங்கு தமிழக மதுபாட்டில்களில் பயன்படுத்தக்கூடிய ஸ்டிக்கர் போன்றவைகளை போலியாக தயாரித்து அதனை மதுபாட்டில்களில் ஒட்டி அதை இம்மாவட்டத்திற்கு கடத்தி வந்து குறைவான விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த வகையான போலி மதுபான தொழிற்சாலை செயல்படுவது தொடர்பாக புதுச்சேரி மாநில காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அடிப்படையில் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |