போலி பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது உவரி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் வேறு பெயரில் போலியாக பாஸ்போர்ட் எடுத்துள்ளார்.
இதனையடுத்து சுரேஷ் போலி பாஸ்போர்ட்டை வைத்து வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் சுரேஷ் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.