Categories
உலக செய்திகள்

தாயின் அவசர முடிவால்…. பரிதாபமாக உயிரிழந்த குழந்தைகள்…. கடிதத்தால் ஏற்பட்ட முக்கிய திருப்பம்….!!

போலியான தடுப்பூசி சான்றிதழ் தயாரித்த பெண் ஒருவர் தனது பிள்ளைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியின் தலைநகரான பெர்லினிற்கு தெற்கில் Koenigs Wusterhausen என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கொலை சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது, கடந்த சனிக்கிழமை அன்று அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் ஒரு வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.

அந்த வீட்டில் மூன்று குழந்தைகள் உள்பட மொத்தம் ஐந்து பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். குறிப்பாக சடலங்களை கண்ட போலீசார் உயிரிழந்த அனைவரும் துப்பாக்கியால் சுடப்பட்டும் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான முக்கிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

 

அதாவது, ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவரின் மனைவி தமது தடுப்பூசி சான்றிதழை போலியாக தயாரித்துள்ளார். இதனால் போலீஸார் தன்மீது நடவடிக்கைகள் எடுத்துவிடுவார்கள் என்று பயந்துள்ளார். மேலும் இதன் காரணமாக குழந்தைகள் தனித்துவிடப்படலாம் என்று நினைத்து இந்த தவறான முடிவை எடுத்துள்ளதாக அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுயிருந்தது தெரிய வந்துள்ளது.

Categories

Tech |