ஆந்திர மாநிலத்தில் மாந்தோப்பு ஒன்றில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கோதாவரி பகுதியில் சிங்கவல்லி சத்யநாராயணன் ஆதிலட்சுமி என்னும் தம்பதியர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரண்டு ஆண் குழந்தைகளும உள்ளனர். இதனிடையில் ஆதி லட்சுமிக்கு இன்னொரு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதுடன் அவருடன் தகாத முறையில் உறவு இருந்து வந்தது .அதன்பிறகு சத்ய நாராயணனுக்கும் தாயார் சாத்தமாவுக்கும் தெரியவந்தது .இதனால் குடும்பத்திலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் ஊர் மக்களுக்கு தெரிய வந்தால் அசிங்கம் ஏற்படும் என்று நினைத்த சத்யநாராயணன் மற்றும் தாயார் சாத்தம்மாவும் ஆதிலட்சுமியிடம் இதைப்பற்றி கேட்டபோது அதற்கு அவள் என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார். இதனை கேட்டு கோபமடைந்த சத்ய நாராயணனும் சாத்தமாவும் ஆதிலட்சுமியை சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்தனர். இந்த கொலை வெளியே தெரிந்தால் போலீசிடம் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு மாந்தோப்பில் ஆதிலட்சுமியின் பிணத்தை எடுத்துச் சென்று பெட்ரோல் ஊத்தி சத்யநாராயணன் எரித்துள்ளார்.அதன்பிறகு அங்கு இருப்பவர்கள் பார்ப்பதற்குள் வீட்டிற்கு வந்துவிட்டார்.
அடுத்த நாள் காலை மாந்தோப்பு வழியே சென்றிருந்தவர்கள் பாதி எறிந்த கிடந்த சடலத்தை பற்றி போலீசாருக்குதெரிவித்தனர்.பிறகு போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் அந்த பகுதியில் உள்ள பிரதான சாலையில் அமைந்துள்ள சிசிடி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் சத்யநாராயனானை விசாரணை செய்தனர். மேலும் விசாரணையில் நடந்ததகை கூறி சத்ய நாராயணனும் தாயார் சாத்தம்மாவும் போலீசில் சரணடைந்துள்ளனர் . அதனால் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.