விபத்தில் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்தினருக்கு 30 லட்ச ரூபாய் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் பால சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போக்குவரத்து போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணி சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து பாரத ஸ்டேட் வங்கி சார்பில் விபத்து காப்பீட்டு தொகையாக பாலசுப்ரமணியின் குடும்பத்தினருக்கு 30 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அப்போது திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.