திருவள்ளூர் நகர காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஜென் சாலையிலுள்ள மளிகைக் கடை பூட்டை உடைத்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 5,000 ரூபாயை திருடிச் சென்றனர். மேலும், கூல்ட்ரிங்ஸ் கடை மற்றும் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்றனர். அதேபோல விஎம் நகரில் இருக்கும் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து வெள்ளி நாணயம் மற்றும் 2,000 ரூபாய் உள்ளிட்டவைகளை திருடிச் சென்றனர்..
அதனைத் தொடர்ந்து, சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை உடைத்து அதிலிருந்த ரூ 2 ஆயிரம் ரூபாய் சில்லரை காசுகளையும் அள்ளிச் சென்றுள்ளனர்.. அதேபோல் பூங்கா நகரில் இருக்கும் மளிகை கடை மற்றும் பிரவுசிங் சென்டரில் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்..
இப்படி அடுத்தடுத்து என நேற்று ஒரே நாளில் ஊரடங்கை பயன்படுத்தி 13 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் தங்கள் வேலையை காட்டியுள்ளனர்.. இந்த கொள்ளை சம்பவம் அந்தபகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர். மேலும், இந்தக் கொள்ளை சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமென அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.