திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள அறிவொளி நகர் ரத்தினசாமி நகரைச் சேர்ந்தவர் தான் மாடசாமி. இவரது மனைவியின் பெயர் அருள்மணி. இந்த தம்பதியருக்கு ஜெபா, மகிமா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.. கணவன், மனைவி இருவரும் அருகில் உள்ள பணியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவர்களது குழந்தைகளை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தசூழலில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், இன்று காலை வெகு நேரமாகியும் இருவரும் வெளியில் வராததால் அக்கம், பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு அருள்மணி ரத்த வெள்ளத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். ஆனால் மாடசாமியை காணவில்லை.
இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பல்லடம் டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான போலீசார் அருள்மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அருள்மணியை, கணவன் மாடசாமி தான் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் கொலைக்கு காரணமான மாடசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு, அவரை செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.