Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒன்றாக சேர்ந்து ரூ 500 கோடியை சுருட்டிய தம்பதியர்… கணவர் செய்த செயலால் போட்டுத் தள்ளிய மனைவி… அவர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்..!!

கணவனை கொலைசெய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு 50 வயதாகிறது. பிரபாகரனுக்கு சுகன்யா(30) என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியர் இருவரும் ரூ 500 கோடி மல்டி லெவல் மார்க்கெட்டிங் (எம்.எல்.எம்) ஊழல் மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர்.. இதில், கணவர் பிரபாகரன் கடந்த 2012 ஆம் ஆண்டு, தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அடுத்த ஆண்டு சுகன்யாவையும் போலீசார் கைது செய்தனர்.. பிரபாகரனுக்கு ஒரு ஆண்டுக்குள்  ஜாமீன் கிடைத்து ஜெயிலில் இருந்து வெளியே வர முடிந்தது.. ஆனால், சுகன்யாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் சில சிக்கல் ஏற்பட்டதால், சுமார் 5 ஆண்டுகள் ஜெயிலில் இருந்துள்ளார்.

பின்னர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த சுகன்யா, கணவர் குறித்த தகவல்கள் கிடைக்காததால் 3 குழந்தைகளுடன் ஆந்திரபிரதேச மாநிலத்தில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கி இருந்துள்ளார். அப்போது, கணவர் பிரபாகரன் ஹைதராபாத்தில் தங்கியிருப்பதாக, சுகன்யாவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அதனைத்தொடர்ந்து தகவலின் பேரில் கணவரைப் பார்க்க சென்ற சுகன்யா, வேறொரு  பெண்ணுடன் தனது கணவர் வசித்து வருவதைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார்.. ஆனால், பிரபாகரனோ தனக்கு பக்கவாதப் பிரச்னை இருப்பதால், அந்தபெண் பராமரிப்பாளராக இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், சந்தேகத்தில் சுகன்யா அந்த பெண்ணை திட்டி வீட்டிலிருந்து விரட்டியுள்ளார்‌.

crime

சில நாட்களில் பிரபாகரன் அந்த பெண்னை மீண்டும் அழைத்து வருமாறு தன்னுடைய மனைவிக்கு தொந்தரவு அளிக்கத் தொடங்கியுள்ளார்.. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சுகன்யா, கணவனை திட்டமிட்டு கொலை செய்து, அதனை தற்கொலை என சித்தரிக்க போலீசாரை அழைத்துள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசாரிடம் பக்கவாதத்தால், தன்னுடைய கணவர் தூக்கத்திலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.. அதனைத்தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சுகன்யா புகார் கொடுக்க மறுத்ததால் போலீசாருக்கு பிரபாகரன் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது‌.

இதையடுத்து, போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சுகன்யா தன்னுடைய கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததால் கொலை செய்தேன் என ஒப்புக் கொண்டார். தொடர்ந்து போலீசார் அடுத்தகட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |