இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்..
கோவை சுந்தராபுரம் பிள்ளையார்புரத்தை சேர்ந்த 28 வயது இளங்கோ கோவையிலுள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகின்றார்.. அங்கு வேலை செய்து வந்த அஞ்சலி (24) என்ற பெண்ணும், இளங்கோவும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கல்யாணம் செய்து கொண்டனர்.. இந்த தம்பதியருக்கு 6 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் வீட்டிலிருந்த அஞ்சலி தூக்குமாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போத்தனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. மேலும் தற்கொலை செய்து கொண்ட அஞ்சலிக்கு கல்யாணம் முடிந்து 2 ஆண்டுகளே ஆன காரணத்தால் அவருடைய சாவு குறித்து கோவை ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.