Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சுடுகாட்டில்… நிர்வாண நிலையில் “கிடந்த பெண்ணின் சடலம்”… போலீசார் விசாரணை..!!

முழு நிர்வாணமாக சுடுகாட்டில் கிடந்த பெண்ணின் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பெரியமணலி ஜேடர்பாளையம் சுடுகாட்டில் நேற்று காலை நிர்வாணமான நிலையில், உடலில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு அந்தபகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.. தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு சென்ற போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணையை ஆரம்பித்தனர்.

சம்பவ இடத்திற்கு துப்பறியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.. அந்த நாயின் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.. அதில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அந்தப்பெண்ணின் உடலை தரையில் தரதரவென இழுத்து சென்று சுடுகாட்டில் வீசிச் சென்றுள்ளனர்.

போலீசார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில், பெரியமணலியை அடுத்துள்ள குமரவேலி பாளையத்தைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ராஜேந்திரன் என்பவரின் மனைவி நாகலட்சுமி (வயது 35) என்பதும் அவர் சமையல் வேலை செய்பவராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் அந்தபெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |