திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ரயில்வே பாதை அருகே இருக்கும் தோட்டம் ஒன்றில் அரை நிர்வாணத்துடன் வடமாநில பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.. அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தபெண்ணின் சடலத்தைமீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் அந்த இடத்தில் நடத்திய சோதனையில் பெண்ணின் சடலத்தின் அருகில் மதுபாட்டில் கிடந்தது. அதில் பதிவாகியிருந்த ரேகையை போலீசார் சேகரித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணையில், சடலமாக கிடந்த அந்தப்பெண் மராட்டிய மொழி பேசுபவர் என்பதும், தனியார் மில்லில் வேலைபார்த்து வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.