தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து ஈரோட்டிற்கு சிமெண்டு மூட்டைகளை லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஓன்று புறப்பட்டது. இந்த லாரியை தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த 40 வயதுடைய லாரி டிரைவர் முருகன் என்பவர் ஓட்டி வந்தார்.. நேற்று காலை தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தசமயம், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத்தடுப்பின் மீது வேகமாக மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.. இந்த விபத்து குறித்து தகவலறிந்த தொப்பூர் காவல்துறையினர் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிரைவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சாலையில் கவிழ்ந்து சேதமடைந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.